புதன், 16 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - வியாழக்கிழமை - 17.08.2023

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – வியாழக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-08.26) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  வியாழக்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 32ம் நாள் (17.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஆகஸ்ட் மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.50.56 மணிக்கு (IST 06.00.32 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.17.06 மணிக்கு (IST 06.26.42 PM)

சந்திரன்:  சிம்ம  ராசியில் நாள் முழுவதும்

கடக லக்ன இருப்பு : 00.10 நாழிகை (00.04 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.05 நாழிகை (12.26 மணிகள்)

 

 

 

ராகு,குரு,

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

லக்னம்,

(சுக்ரன்)

 

செவ்வாய்,புதன், சந்திரன்,சூரியன்

 

 

கேது

 

 

 

 

 

 

 

          சிம்ம சூரியன் அதிகாலை 04.48மணி முதல்  ஆவணி மாதப்பிறப்பு வெள்ளிக்கிழமை.

 

இன்று வியாழக்கிழமை : கிழமை அதிபதி குரு பூரண பலத்துடன் மாத அதிபதி சூரியனையும் சிம்மராசியையும் 5ம் பார்வை பார்ப்பது செயல்களில் ஒரு உற்சாகத்தை கொடுக்கும். மேலும் அரசாங்கம், அரசு ஊழியர்கள் முடிவுகளில் நன்மை அதிகம் இருக்கும்  நாட்டை ஆள்வோர் இன்று எடுக்கும் முடிவில் தேச முன்னேற்றத்துக்கு வழி உண்டாகும். மக்கள் தங்களின் பல தேவைகள் பூர்த்தியாக இன்று அஸ்திவாரம் அமையும்

 

திதி : வளர்பிறை பிரதமை  (29.02  நாழிகை) மாலை 05.27 மணி வரை பின் வளர்பிறை த்விதீயை  திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  சூன்ய  திதி

 

இன்றைய திதி பெரிய நன்மைகள் இல்லை எனினும் துன்பங்களும் இருக்காது நாம் செய்யும் முயற்சிகள் அரசு தொடர்பு, அயல்நாடு வேலை பயணம் இவற்றில் இழுபறி இருக்கும். ஆனால் இன்றைய நாள் குழந்தைக்காக வேண்டுவோர் கணவர் மனைவி கூடினால் கரு உண்டாகும் யாருக்கு பிறப்பு ஜாதகத்தில் குரு வலுவாக இருக்கோ அவர்களுக்கு 100% கரு உண்டாக வாய்ப்பு.

 

நக்ஷத்திரம் : மகம் (29.10 நாழிகை) மாலை 05.30  மணி வரை பின் பூரம் நக்ஷத்திரம்.

(இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று வியாழன் - நக்ஷத்திர பலன்

 

யோகம்: பரிகம் (20.35 நாழிகை) பிற்பகல் 03.03 மணி வரை பின் சிவ  யோகம்  

(யோக அதிபதிகள், சனி, புதன் இருவருடைய நிலையும் மிக வலு  கட்டுமான துறை, எலெக்ட்ரிகல், வீடு,மின்சாதன பொருட்கள் தயாரிப்போர், விற்பனை செய்வோர் இவர்களுக்கு இன்று லாபம் கொழிக்கும், கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும், கதை,கவிதை கட்டுரை எழுதுவோர், இசை துறையில் இருப்போருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும்)

 

கரணம் : பவ (29.02  நாழிகை) மாலை 05.27  மணி வரை பின் பாலவ கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள்,சூரியன் சந்திரன் இரண்டுமே மிக வலு, அரசாங்கத்துக்கு நல்ல பெயர் முயற்சியில் வெற்றி பால், உணவு பொருட்கள் தாராளம், வெளியூர் பயணங்கள் மிகுந்த நன்மை தரும் மேலும் மனம் தெளிவாக மகிழ்ச்சியாக இருக்கும் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்)

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் மாலை 05.30 மணி வரை, பின் சித்த யோகம்

 

வாரசூலை : தெற்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  உத்திராடம்  மாலை 05.30  மணி வரை பின் திருவோணம்  

 

ராகு காலம் : பிற்பகல் 01.37 மணி முதல் பிற்பகல் 03.11  மணி வரை

எமகண்டம் : காலை 05.51 மணி முதல் காலை 07.24  மணி வரை

குளிகை : காலை 08.57  மணி முதல் பகல் 10.31 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 07.50 மணி முதல் காலை 08.50 மணி வரை, மாலை 07.51 மணி முதல் இரவு 08.51 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பிற்பகல் 02.58 மணி முதல் மாலை 04.38 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 02.30 மணி முதல் அதிகாலை 04.18 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்) – ஆங்கில கணக்கு படி 18ம் தேதி இரவு

  

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.50 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

குரு

காலை

05.50–06.50

செவ்வாய்

06.50-07.50

சூரியன்

07.50-08.50

சுக்ரன்

08.50-09.50

புதன்

09.50-10.50

சந்திரன்

10.50-11.50

சனி

11.50-12.50

குரு

பிற்பகல்

12.50-01.50

செவ்வாய்

01.50-02.50

சூரியன்

02.50-03.50

சுக்ரன்

மாலை

03.50-04.50

புதன்

04.50-05.50

சந்திரன்

05.50-06.51

சனி

இரவு

06.51-07.51

குரு

07.51-08.51

செவ்வாய்

08.51-09.51

சூரியன்

09.51-10..51

சுக்ரன்

10.51-11.51

புதன்

நடு இரவு

11.51-12.51

சந்திரன்

12.51-01.51

சனி

01.51-02.51

குரு

02.51-03.51

செவ்வாய்

அதிகாலை

03.51-04.51

சூரியன்

04.51-05.51

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

கடகம்

05.58

 

மகரம்

06.28

சிம்மம்

08.04

 

கும்பம்

08.22

கன்னி

10.04

 

மீனம்

10.04

துலாம்

12.04

 

மேஷம்

11.46

விருச்சிகம்

02.10

 

ரிஷபம்

01.40

தனூர்

04.22

 

மிதுனம்

03.44

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் : ஓரளவு நன்றாக இருக்கும் அரசின் செயல்பாடுகள் நன்மையை தரும், புதிய முயற்சிகளில் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் இருக்கும். குழந்தை வேண்டும் கணவன் மனைவி இன்று கூடினால் குழந்தை உண்டாக வாய்ப்பு.  நல்ல நாள்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கோமளவல்லித்தாயார் சமேத நித்யகல்யாண பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...