வியாழன், 18 ஏப்ரல், 2024

தினசரி பஞ்சாங்கம் : வெள்ளிக்கிழமை - சித்திரை மாதம் 06ம் தேதி - 19.04.2024 - ஸர்வ ஏகாதசி விரதம் - கரிநாள்

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-42.13) ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு & லோகல் மீன் டைமுக்கு கணித்தது. (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி  1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : வெள்ளிக்கிழமை -சர்வ ஏகாதசி -  கரிநாள்   

ஸ்ரீகுரோதி வருஷம்(வரிசைப்படி 38வது வருடம்) சித்திரை மாதம் 06ம் நாள் (19.04.2024), உத்தராயணம், வசந்த ருது,கலியுகம் 5125, சாலிவாகனம்-1946, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,ஏப்ரல் மாதம். மேஷ  மாதம்

 


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05:48:06 மணிக்கு (IST 05.57.42 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.10.01 மணிக்கு (IST 06.19.37 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்: சிம்ம ராசியில்  நாள்முழுவதும்

மேஷ  லக்ன இருப்பு : 03.30 நாழிகை (01.24 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.55 நாழிகை (12.22  மணிகள்)

 

அம்ருதாதி யோகம் :  மரண யோகம் காலை 08.28 மணி வரை பின் சித்த யோகம்

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

ராகு காலம் : பகல் 10.26 மணி முதல் – பிற்பகல் 11.59 மணி வரை

எமகண்டம் :  பிற்பகல் 03.05 மணி முதல் மாலை 04.37 மணி வரை

குளிகை : காலை 07.21 மணி முதல் காலை 08.54 மணி வரை

ப்ரம்ம முகூர்த்தம் :  அதிகாலை 04.30 மணி முதல், காலை 05.45 மணி வரை, அபிஜித் முகூர்த்தம் : பிற்பகல் 11.48 மணி முதல் பிற்பகல் 12.39 மணி வரை,, கோதுளி முகூர்த்தம் : 05.50 மணி முதல் மாலை 06.40 மணி வரை (தோஷம் இல்லை)

கெடுதல் நேரம் : காலை 08.16 மணி முதல் காலை 09.06 மணி வரை, பிற்பகல் 12.24 மணி முதல் 01.13 மணி வரை

மோசமான  முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)  மாலை 05.31 மணி முதல் இரவு 07.20 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

இன்றய லக்னம் விவரம் மணியில்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

மேஷம்

05.24

07.12

 

துலாம்

05.40

07.45

ரிஷபம்

07.12

09.13

 

விருச்சிகம்

07.45

09.57

மிதுனம்

09.13

11.25

 

தனூர்

09.57

12.08

கடகம்

11.25

01.39

 

மகரம்

12.08

02.11

சிம்மம்

01.35

03.43

 

கும்பம்

02.11

03.53

கன்னி

03.38

05.40

 

மீனம்

03.53

05.20

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் சுப செயல்களுக்கு ஏற்றது.

 

 இன்றய நாளின் தன்மை : நல்ல நாள்

 

நேத்ரம் (கண்)

சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம் வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை

2 மிக நன்று

ஜீவன் (உயிர்)

1 – மிக நன்று

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,

ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.

 

இன்றய கசர யோகம் : மிக நன்று, வெற்றி உண்டு

கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது. சூரியன் நின்ற  நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம் குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால் (9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள் பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம் எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது.

 

 

 

 

இன்றய பஞ்சாங்க நிலை: பரவாயில்லை

 

இன்றய நாள் (வாரம்) : வெள்ளிக்கிழமை – அதிபதி சுக்ரன்

கிழமை அதிபதி சுக்ரன் பலம் விவரங்கள்

சுக்ரன்

விவரம்

அதிபதி

அதிபதி பலம்

நிலை

 

இருக்கும் வீடு

மீனம்

குரு

537.99

நட்பு

 

நின்ற நக்ஷத்திரம் & பாதம்

ரேவதி - 3

புதன்

412.01

அஸ்தங்கம்

 

சுக்ரன் பலம்

ஷட்பலம்

585.77

நட்பு

 

உங்களுக்கு சுக்ரன்  தசை அல்லது புக்தியானால்

இஷ்டபலம்

56.28

மிக நன்று

 

கஷ்டபலம்

2.49

இல்லை

 

சுபமான செயல்கள்

திருமண முயற்சி, வாகனம் வாங்குதல், பண முதலீடு, ஷேர்மார்கெட், கலைத்துறை, மீடியா, ஆடை ஆபரணம் வாங்குதல், ஆடைவடிவமைப்பு துறை, நாட்டியம் சங்கீதம் என இன்று பல நல்ல பலன்கள் இருக்கும். கேளிக்கை, சுற்றுலா நன்று

கவனமான செயல்கள்

மழை பாதிப்பு, ஆரோக்கிய பாதிப்புகள் இருக்க வாய்ப்பு ஆனாலும் மிக குறைவு

 

 

இன்றய திதி (வளர்பிறை)  - ஏகாதசி திதி (35.20 நாழிகை)  இரவு 07.56 மணி வரை, பின் துவாதசி  திதி

 

திதி

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

ஏகாதசி

செவ்வாய்

351.65

பகை

இரவு வரை ஓரளவு நன்மை, வீடு நிலம் சம்பமான விஷயங்களை ஒத்திவைப்பது நலம்.

துவாதசி

புதன்

412.01

அஸ்தங்கம்

கல்வி தொடர்பு விஷயங்கள் நன்மை உண்டு பெரிய கெடுதல் எதுவும் இல்லை

இன்றய ஸ்ரார்த்த திதி :  ஏகாதசி  (வாக்கிய பஞ்சாங்கப்படி)

 

 

இன்றய நக்ஷத்திரம் :

மகம் (06.40 நாழிகை)  காலை 08.28 மணி வரை (அதிபதி கேது), பின் பூரம் (அதிபதி சுக்ரன்)

இன்று நல்ல பலன்கள் பெறும் நக்ஷத்திரங்கள் :

 

காலை 08.28 மணி வரை : பரணி,கார்த்திகை, மிருகசீரிடம்,புனர்பூசம்,ஆயில்யம், பூரம்,உத்திரம்,சித்திரை,விசாகம்,கேட்டை,பூராடம், அவிட்டம், பூரட்டாதி,ரேவதி

 

காலை 08.28 மணிக்கு மேல் அடுத்த நாள் சூரியோதயம் வரை : இல்லை  

 

மேற்படி நக்ஷத்திர பலன்கள் பொது, உங்கள் நக்ஷத்திர அதிபதி பலம், நட்பு பகை இவற்றை கொண்டே பலன்கள் சரியாக இருக்கும். ஆனாலும் இன்றைய கிரஹ நிலைகளை கொண்டு பலருக்கும் ஓரளவு நன்மை உண்டாக அதிக வாய்ப்பு.

 

இன்றய சந்திராஷ்டமம் : உத்திராடம் காலை 08.28 மணி வரை பின் திருவோணம்   

 

இன்றய யோகம் :

விருத்தி யோகம் (38.45 நாழிகை) இரவு 09.18 மணி வரை  பின் துருவ யோகம்

 

யோகம்

அதிபதி

பலம்

நிலை

சுபம்/அசுபம்

விருத்தி

புதன்

412.01

அஸ்தங்கம்

ஓரளவே நன்மை, பெரிய கெடுதல் இல்லை எனினும் யோசித்து செயல்படுவது நலம் தரும்

துருவ

கேது

357.48

அஸ்தங்கம்

 

 

இன்றய கரணம் :

வணிசை கரணம் (02.05 நாழிகை) காலை 06.38 மணி வரை, பிறகு பத்தரை கரணம் (33.15 நாழிகை) இரவு 07.56 மணி வரை, பிறகு பவ கரணம்  

 

கரணம்

அதிபதி

பலம்

நிலை

சுபம் /அசுபம்

வணிசை

சுக்ரன்

585.77

நட்பு

திருமணம், ட்ரேடிங்க், கலைத்துறை, மீடியா, கட்டுமான துறை, நிர்வாகம் குடும்பத்தில் பெரியோர்கள் தேவை என செயல்பாடுகளில் வெற்றி உண்டு, நல்ல பலன்கள் அதிகம்

பத்தரை

சனி

339.94

ஆட்சி

பவம்

சூரியன்

480.94

உச்சம்

 

 

 

 

பொதுவாக இன்றய நாளில் செய்யத்தக்கது :

 

திருமண முயற்சிகள், கலைத்துறை,மீடியா, ஷேர்மார்கெட், பண முதலீடு ஆடை ஆபரணம் வாங்குதல், வாகனம், கட்டுமானத்துறை,இப்படி பல இனங்களிலும் இன்று நன்மை அதிகம். புதிய முயற்சிகளில் வெற்றிகள் இருக்கும். சுக்ரன் தசை புக்தி சாகதமாக இருப்பவர்களுக்கு இது அதிகம் மற்றவர்கள் ஜாதக நிலை பொறுத்து கொஞ்சம் மாறுபடும். பொதுவாக இன்று ஒரு மகிழ்ச்சியான நாள், கேளிக்கை, சுற்றுலா, பெண்களால் நன்மை, புதிய வேலைக்கான முயற்சிகளில் நன்மை, வெளிநாட்டு பயண வாய்ப்பு என நன்றாக இருக்கும்.

 

 

 

ராகு,சுக்ரன்,(புதன்),உபகேது

 குரு,லக்னம்,சூரியன்

பரிவேஷா,குளிகன்,மாந்தி

காலா

சனி,செவ்வாய்,இந்திரச்சப்பா

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

தூமா,சந்திரன்,ம்ருத்யூ

 

வ்யதீபாத

 

  கேது,அர்த்தப்ரஹரணா,யமகண்டகா

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி (விஷ ராசி) இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05.48.06 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

இன்றய நிலை

லக்னம்

06:33:38

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

நட்பு

சூரியன்

06:23:43

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

உச்சம்

சந்திரன்

12:01:12

சிம்மம்

கடகம்

மகம்

4

நட்பு

செவ்வாய்

27:57:40

கும்பம்

மிதுனம்

பூரட்டாதி

3

பகை

புதன் - வக்ரம்

24:39:37

மீனம்

கும்பம்

ரேவதி

3

அஸ்தங்கா

குரு

28:18:04

மேஷம்

தனூர்

கார்த்திகை

1

 நட்பு

சுக்ரன்

24:03:23

மீனம்

கும்பம்

ரேவதி

3

நட்பு

சனி

22:27:48

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

ஆட்சி

ராகு -வக்ரம்

22:32:31

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

கேது - வக்ரம்

22:32:31

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

மாந்தி

13:42:04

ரிஷபம்

ரிஷபம்

ரோஹிணி

2

நட்பு

குளிகன்

01:55:26

ரிஷபம்

மகரம்

கார்த்திகை

2

நட்பு

தூமா

19:43:43

சிம்மம்

கன்னி

பூரம்

2

நட்பு

வ்யதீபாதா – வக்ரம்

10:16:17

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

3

பகை

பரிவேஷா - வக்ரம்

10:16:17

ரிஷபம்

மேஷம்

ரோகிணி

1

பகை

இந்திரச்சப்பா

19:43:43

கும்பம்

மீனம்

சதயம்

4

நட்பு

உபகேது

06:23:43

மீனம்

சிம்மம்

உத்திரட்டாதி

1

நட்பு

காலா

26:52:05

மிதுனம்

மிதுனம்

புனர்பூசம்

3

நட்பு

ம்ருத்யூ

10:01:59

சிம்மம்

கடகம்

மகம்

4

நட்பு

அர்தப்ரஹரணா

02:45:58

கன்னி

மகரம்

உத்திரம்

2

நட்பு

யமகண்டகா

25:38:46

கன்னி

சிம்மம்

சித்திரை

1

நடுநிலை

 

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  சுக்ரனுக்கு  2ல் இருக்கும் குரு,சூரியன், இவர்கள் சுக்ரனின் செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், பலன்கள் பரவாயில்லை, அதேபோல , 12ல் இருக்கும்  சனி,செவ்வாய்,இந்திரச்சப்பா, 03ல் இருக்கும் காலா இவர்கள் சுக்ரனின் செயலை தடுக்கும். இது போல  ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

 

               

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.48.06 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.48-06.48

செவ்வாய்

 

05.48-06.48

புதன்

06.48-07.48

சூரியன்

இரவு

06.48-07.48

சந்திரன்

07.48-08.48

சுக்ரன்

 

07.48-08.48

சனி

08.48-09.48

புதன்

 

08.48-09.48

குரு

09.48-10.48

சந்திரன்

 

09.48-10.48

செவ்வாய்

10.48-11.48

சனி

 

10.48-11.48

சூரியன்

11.48-12.48

குரு

நடு இரவு

11.48-12.48

சுக்ரன்

பிற்பகல்

12.48-01.48

செவ்வாய்

 

12.48-01.48

புதன்

01.48-02.48

சூரியன்

 

01.48-02.48

சந்திரன்

02.48-03.48

சுக்ரன்

 

02.48-03.48

சனி

மாலை

03.48-04.48

புதன்

அதிகாலை

03.48-04.48

குரு

04.48-05.48

சந்திரன்

 

04.48-05.48

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக மோகனவல்லித்தாயார்  சமேத காளமேகப்பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...