ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - திங்கள் கிழமை - 28.08.2023 - ப்ரதோஷம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – திங்கள்கிழமை - ப்ரதோஷம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-09.78) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  திங்கள்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 11ம் நாள் (28.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, சிராவணம்-பாத்ரபதம், ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.51 மணிக்கு (IST 06.01.27 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.10.34 மணிக்கு (IST 06.20.10 PM)

சந்திரன்:  தனூர் ராசியில் காலை 08.39 மணி வரை, பின் மகர ராசி

சிம்ம லக்ன இருப்பு : 03.30 நாழிகை (01.24 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.45 நாழிகை (12.18  மணிகள்)

 

 

ராகு, குரு

 

 

(சனி)

சந்திரன் மகர ராசிக்கு காலை 08.39 மணிக்கு ப்ரவேசம்

(சுக்ரன்)

 

லக்னம், சூரியன், (புதன்)

சந்திரன்

 

கேது

செவ்வாய்

 

       




கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.51 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

சிம்மம்

கடகம்

மகம்

4

சாதகம்

சூரியன்

சிம்மம்

கடகம்

மகம்

4

மூல.திரி

சந்திரன்

தனூர்

தனூர்

உத்திராடம்

1

சம நிலை

செவ்வாய்

கன்னி

மீனம்

உத்திரம்

4

சம நிலை

புதன்

சிம்மம்

தனூர்

உத்திரம்

1

வக்ரம்

குரு

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

கடகம்

மகரம்

ஆயில்யம்

2

வக்ரம்

சனி

கும்பம்

மகரம்

சதயம்

2

வக்ரம்

ராகு

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

வக்ரம்

கேது

துலாம்

துலாம்

சித்திரை

3

வக்ரம்

 

 

இன்று திங்கள்கிழமை : கிழமை அதிபதி சந்திரன் வலுவாக இருந்தாலும் புதன் சுக்ரன் சஞ்சாரங்களும் மீன ராசிக்கான பாவத்தில் ராகுவும் பயண தடை காரியத்தடை ஏற்படுத்தும், குறிப்பாக கல்வி, மாணவர், ஆசிரியர் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடுகள் நிறைந்திருக்கும். சிலருக்கு வெளிநாட்டு படிப்பு முயற்சிகளில் மந்தம் ஏற்பட வாய்ப்பு, அரசாங்கத்துக்கு வேற்று மொழி இன மக்களால் பிரச்சனை ஏற்படலாம் ஒரு கவனம் தேவை

 

திதி : வளர்பிறை துவாதசி  (30.58  நாழிகை) மாலை 06.14 மணி வரை பின் வளர்பிறை த்ரையோதசி  திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  துவாதசி & திரையோதசி  திதி - திதி த்வயம்

 

இன்றைய திதி அதிபதி புதன்  மிக நன்றாக இருக்கிறது ஆனாலும், சுக்ரன் ராகு சஞ்சாரங்கள் துலாம், மகர ராசிகளுக்கு சிறு பாதிப்பு ஏற்படுத்துகிறது. உங்கள் ஜாதகத்தில் துலாம், மகரம் லக்னத்துக்கு எத்தனையாவது இடமோ அது பாதிக்கப்படும். நிதானம் தேவை, மேலும் கால புருஷ வசனப்படி 7, 10 ராசிகள் ஆவதால் கணவன் மனைவி, கூட்டாளி, தொழில் வேலை இவற்றுக்கான பிரச்சனையும், தாயார் கால், வயிறு பாதிப்புகளுக்கான சிகிச்சைகளும் உண்டாக வாய்ப்பு அதிகம் நிதானமாக யோசித்து செயல்படுவது நலம் தரும்

 

நக்ஷத்திரம் : உத்திராடம்   (47.12  நாழிகை) இரவு 12.44 மணி வரை பின் திருவோணம் (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று திங்கள் - நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: ஆயுஷ்மான் (01.08 நாழிகை) காலை 06.18 மணி வரை பின் சௌபாக்யம்  யோகம் (50.22 நாழிகை) இரவு 02.27 மணி வரை, பின் சோபன யோகம்

(யோக அதிபதிகள், குரு,சுக்ரன்,சனி ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும் சில தடைகளும் இருப்பது கொஞ்சம் நிதானித்து செயல்படவேண்டும் தாமதம் ஆகும் அவ்வளவே பெரிய பாதிப்பு இருக்காது.)

 

கரணம் : பவம்(05.02  நாழிகை) பகல் 07.52 மணி வரை பின் பாலவம்  கரணம் ( 25.56 நாழிகை) மாலை 06.14 மணி வரை, பின் கௌலவம்  கரணம் ( 25.38 நாழிகை ) அதிகாலை 04.29 மணி வரை, பின் தைத்துல கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள், சூரியன்,சந்திரன்,செவ்வாய்  சாதக நிலை உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு, கொஞ்சம் இழுபறிபோல தோன்றும் ஆனாலும் வெற்றி கிட்டும், அரசாங்கம், வீடுவாகனம், பயணம் புதிய பணம்சம்பந்தப்பட்ட முயற்சிகளும் சற்று தாமதத்துக்கு பின் நிறைவேறும் )

 

அம்ருதாதி யோகம் :  மரண யோகம் இரவு 12.44 மணி வரை பின் அம்ருத யோகம்

 

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  மிருகசீரிடம்  இரவு 12.44 மணி வரை பின் திருவாதிரை    

 

ராகு காலம் : காலை 07.24 மணி முதல் காலை 08.57  மணி வரை

எமகண்டம் : பகல் 10.29 மணி முதல் பிற்பகல் 12.01  மணி வரை

குளிகை : பிற்பகல் 01.34 மணி முதல் பிற்பகல் 03.06 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.52 மணி முதல் காலை 06.51  மணி வரை, மாலை 05.51 மணி முதல் இரவு 08.51 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பிற்பகல் 02.54 மணி முதல் பிற்பகல் 03.06 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : பகல் 10.25 மணி முதல் பிற்பகல் 11.51  மணி வரை, அதிகாலை 04.16 மணி முதல் அதிகாலை 05.41 மணி வரை (ஆங்கிலப்படி 29ம் தேதி காலை) (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.51 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சந்திரன்

காலை

05.51–06.51

சனி

06.51-07.51

குரு

07.51-08.51

செவ்வாய்

08.51-09.51

சூரியன்

09.51-10.51

சுக்ரன்

10.51-11.51

புதன்

11.51-12.51

சந்திரன்

பிற்பகல்

12.51-01.51

சனி

01.51-02.51

குரு

02.51-03.51

செவ்வாய்

மாலை

03.51-04.51

சூரியன்

04.51-05.51

சுக்ரன்

05.51-06.51

புதன்

இரவு

06.51-07.51

சந்திரன்

07.51-08.51

சனி

08.51-09.51

குரு

09.51-10..51

செவ்வாய்

10.51-11.51

சூரியன்

நடு இரவு

11.51-12.51

சுக்ரன்

12.51-01.51

புதன்

01.51-02.51

சந்திரன்

02.51-03.51

சனி

அதிகாலை

03.51-04.51

குரு

04.51-05.51

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.51 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

சிம்மம்

07.15

 

கும்பம்

07.33

கன்னி

09.15

 

மீனம்

09.15

துலாம்

11.15

 

மேஷம்

10.57

விருச்சிகம்

01.21

 

ரிஷபம்

12.50

தனூர்

03.33

 

மிதுனம்

02.58

மகரம்

05.41

 

கடகம்

05.09

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் : சுமார், புது முயற்சிகளை நிதானத்துடன் பெரியோர் ஆலோசனைப்படி செய்வது நன்மை தரும். அரசாங்கத்துக்கு புதிய தலைவலி வரலாம் கவனம் தேவை

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பெருந்தேவித் தாயார்  சமேத ஸ்ரீவரதராஜபெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...