வெள்ளி, 1 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - சனிக்கிழமை - 02.09.2023

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – சனிக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-10.47) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  சனிக்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 16ம் நாள் (02.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம், செப்டம்பர்  மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.04 மணிக்கு (IST 06.01.40 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.07.16 மணிக்கு (IST 06.16.52 PM)

சந்திரன்:  மீன ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 02.40 நாழிகை (01.04 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.40 நாழிகை (12.16  மணிகள்)

 

சந்திரன்

ராகு, குரு

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலை

(சுக்ரன்)

 

லக்னம், சூரியன், (புதன்)

 

 

கேது

செவ்வாய்

 

 

 

       


கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

சம நிலை

சூரியன்

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

மூல.திரி

சந்திரன்

மீனம்

விருச்சிகம்

உத்திரட்டாதி

4

சம நிலை

செவ்வாய்

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

சம நிலை

புதன்

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

வக்ரம் நட்பு

குரு

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

வக்ரம் பகை

சனி

கும்பம்

மகரம்

சதயம்

2

வக்ரம் மூல திரி.

ராகு

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

வக்ரம் பகை

கேது

துலாம்

துலாம்

சித்திரை

3

வக்ரம்

 

 

இன்று சனிக்கிழமை : கிழமை அதிபதி சனி திக்குபலமும், சேஷ்டா பலமும் நன்றாக இருக்கிறது, தமிழகத்தின் தென் கிழக்கு பகுதிகளிலும், மேற்கிலும் மழை காற்று அதிகம் இருக்கலாம்,  அதே நேரம், பாப திருஷ்டி அதிகரிப்பதும் ராஜகிரகமான சூரியனை பார்ப்பதாலும் அரசருக்கு கேடு நெறிதவறிய செயல்களில் உயர்பதவியில் இருப்போர் செயல்பாடுகள் ஆட்சிக்கு துன்பம் விளைவிக்கும். வீடு நிலம் போன்ற விஷயங்களில் மக்கள் பார்த்து முடிவெடுப்பது நலம் தரும். மாரக கிரஹம் புதன் வலுவாக இருப்பது ஓரளவு நன்மை தந்தாலும் பெரும் நஷ்டத்தையும் தரும், முதலீடுகளில் கவனம், புத்திர வகையில் துன்பம் வரலாம், வெகு சுமார் இறைவழிபாடு நன்மை தரும்.

 

திதி : தேய்பிறை திருதியை  (37.00  நாழிகை) இரவு 08.40 மணி வரை பின் தேய்பிறை சதூர்த்தி  திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய். திருதியை  திதி

 

இன்றைய திதி அதிபதி செவ்வாய் கொஞ்சம் சுமார், கேது கெடுதல் தருகிறது. வீடு கட்டுமான தொழில், நிலம், விவசாயம், நெற்பயிர், ரியல் எஸ்டேட், கொடுக்கல் வாங்கல், நிலம் சம்பந்தமான வழக்குகள் இவற்றில் கொஞ்சம் கவனமும் செயல்பாடுகளை ஒத்திப்போடுவதும் நலம் தரும். அதே போல மருத்துவ துறையில் சிக்கல்கள் வரலாம், மருந்துகளால் மக்கள் பாதிக்கப்படலாம், மருத்துவர்கள் ஊழியர்கள் கவனம் தேவை

 

நக்ஷத்திரம் : உத்திரட்டாதி  (11.32  நாழிகை) பகல் 10.29 மணி வரை பின் ரேவதி (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇


இன்று சனிக்கிழமை - நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: கண்ட (51.02 நாழிகை) இரவு 02.17 மணி வரை பின் விருத்தி  யோகம்

 

(யோக அதிபதி சனி வெகு சுமார், அரசருக்கு அவதி, உடன் இருப்போர் செயல்பாடுகள் திருப்தியை தராது, வேறு அரசர்களுடன் மோதல் வரலாம், அது மக்களுக்கும் பாதிப்பை தரும், மேற்கில் காற்று மழை அதிகம், தென் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு, செலவுகள் அதிகரிக்கும், பொதுமக்களுக்கு மருத்துவம், வீடு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவ்வளவு நன்மை இருக்காது எல்லாம் தாமதம் ஆகும். )

 

கரணம் : வணிசை  (10.38  நாழிகை) பகல் 10.07 மணி வரை பின் பத்தரை  கரணம் ( 26.22. நாழிகை) இரவு 08.40  மணி வரை, பின் பவம்  கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள், சுக்ரன்,சனி,சூரியன் ஓரளவு நன்மை, இருந்தாலும் எதிலும் ஒரு கவனம், யோசித்து செயல்படுதல் நன்மை தரும், அரசாங்க விஷயங்களில் நிதானத்துடன் செயல்படுவது நன்மை தரும் )

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் காலை 10.29 மணி வரை பின் மரண யோகம்

 

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  மகம் பகல் 10.29 மணி வரை பின் பூரம்   

 

ராகு காலம் : காலை 08.56 மணி முதல் பகல் 10.28  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 01.32 மணி முதல் பிற்பகல் 03.03  மணி வரை

குளிகை : காலை 05.52 மணி முதல் காலை 07.24 மணி வரை

 

நல்ல நேரம் :, பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 12.52 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 05.52 மணி முதல் காலை 07.30 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 09.32 மணி முதல் இரவு 11.00 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சனி

காலை

05.52–06.52

குரு

06.52-07.52

செவ்வாய்

07.52-08.52

சூரியன்

08.52-09.52

சுக்ரன்

09.52-10.52

புதன்

10.52-11.52

சந்திரன்

11.52-12.52

சனி

பிற்பகல்

12.52-01.52

குரு

01.52-02.52

செவ்வாய்

02.52-03.52

சூரியன்

மாலை

03.52-04.52

சுக்ரன்

04.52-05.52

புதன்

05.52-06.52

சந்திரன்

இரவு

06.52-07.52

சனி

07.52-08.52

குரு

08.52-09.52

செவ்வாய்

09.52-10.52

சூரியன்

10.52-11.52

சுக்ரன்

நடு இரவு

11.52-12.52

புதன்

12.52-01.52

சந்திரன்

01.52-02.52

சனி

02.52-03.52

குரு

அதிகாலை

03.52-04.52

செவ்வாய்

04.52-05.52

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.51 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

சிம்மம்

06.56

 

கும்பம்

07.14

கன்னி

08.56

 

மீனம்

08.56

துலாம்

10.56

 

மேஷம்

10.38

விருச்சிகம்

01.02

 

ரிஷபம்

12.31

தனூர்

03.14

 

மிதுனம்

02.39

மகரம்

05.22

 

கடகம்

04.50

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் :  வெகு சுமார், எதிலும் ஒரு கவனம், வீடு, நிலம் விவசாயம் வழக்குகள் இவற்றில் அதிக கவனம் செலுத்துவது நலம் தரும், அரசு அரசு ஊழியர்கள் தங்கள் செயல்பாடுகளில் அதிக கவனம் தேவை பக்குவத்துடன் செயல்பட வேண்டும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக மரகதவல்லித்தாயார்  சமேத கோலவில்லி ராமர்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...