ஜோதிடத்தில் சில தத்துவங்கள்
ஒரு சாக்லெட் வாங்க போகிறோம், கடை மூடியிருக்கு, ஒரு வேலைக்கு இண்டர்வ்யூ போகிறோம் சிறப்பாக செய்கிறோம் ஆனால் செலக்ட் ஆகலை பொருத்தம் நன்றாக இருக்கு பெரியோர்களுக்கும் பிடித்து இருக்கு ஆனா திருமணம் கைகூட வில்லை
ஜோதிடர் சொல்லும் பரிகாரங்களை வழிமுறைகளை செய்கிறார் ஆனால் பலன் இல்லை. வீடு வாங்க அட்வான்ஸ் கொடுத்தாச்சு அல்லது வீடு விற்க ஏற்பாடு செய்தாகிவிட்டது ஆனால் காரியம் முழுமையடையவில்லை ஏன்?
இப்படி பலவிஷயங்கள்
இதற்கான தீர்வு வழி ஜோதிடத்தில் இருக்கா என்றால் நிச்சயம் இருக்கு
பல முனிவர்கள் வல்லுனர்கள் தங்கள் கண்டுபிடிப்பை புத்தகமாக எழுதி வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஜோதிடரும் தங்களுக்கு பிடித்த குருமார்கள் சொல்லியவழியில் இந்த தீர்வை மக்களுக்கு சொல்லுகின்றனர்.
அடியேன் மகரிஷி பராசரர், வராகமிகிரர், ஜெய்மினி முனிவர் (மகரிஷி பராசரரின் சீடர்) தத்துவங்களை கொண்டு பலன் சொல்கிறேன். மற்றவர்களுடையதும் கொஞ்சம் சோதித்து பார்த்து ஏற்கிறேன்.
ஒருவருடைய ஜாதகத்தில் கல்வி காரகன் புதன் வலுவாக இருக்கிறான் நான்காம் பாவம் (லக்னத்திலிருந்து) பலமாக இருக்கிறது என கொள்வோம் அவருக்கு படிப்பு சரியாக அமையவேண்டும் உயர்கல்வி அமையனும்
ஆனால் என்ன ஆகிறது அவர் பிடிக்காத படிப்பை எடுக்கிறார் அதில் அவரால் மதிப்பெண்கள் பெற இயலவில்லை , அல்லது பிடித்த படிப்பை எடுக்கிறார் அதிலும் நல்ல மதிப்பெண் பெற இயலவில்லை, மேலும் உயர்படிப்பும் படிக்க இயலவில்லை
ஏன் எனில் இங்கு ஜெய்மினியின் அர்கலா, விரோத அர்கலா தத்துவம் பயன்படுகிறது. (வேத ஜோதிடத்தில் இது மிக முக்கியமான ஒன்று)
அர்கலா (தலையீடு) - இன்டெர்வென்ஷன்/இன்ஃப்ளுயன்ஸ்)
எந்த ஒரு கிரஹத்துக்கும் அல்லது ராசிக்கும் 2,4,11 ல் இருக்கும் கிரஹம் அந்த ராசி தன் ஆளுமையை பயன்படுத்தி அதை தடுக்கும் (தத்கால பகை) அல்லது பெரிய விளைவை தராது (சமமாக இருந்தால்) அல்லது மிகுந்த நன்மையை தரும் (தத்கால அதி நட்பாக இருந்தால்)
அதே போல விரோத அர்கலா (அப்ஸ்ட்ரக்ஷன் - தடைகள்)
ஒரு ராசிக்கு அல்லது கிரஹத்துக்கு 12,10,3,9ல் இருக்கும் கிரஹம் அந்த செயலை தடுத்துவிடுகிறது
பஞ்சாங்கத்தில் கிரஹ நிலைகள் தினசரி கொடுக்கப்பட்டு இருக்கு. உங்கள் ஜாதகத்தை கையில் வைத்துக்கொண்டு மேற்படி விஷயங்களை கருத்தில் கொண்டு அன்றைய பஞ்சாங்கத்தில் கிரஹ நிலைகள் எப்படி இருக்கு நட்பா பகையா சமமா என பார்த்து அதற்குறிய லக்னம், ஹோரையில் செயல்பட்டால் பலன் நிச்சயம் உண்டு.
ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக