வெள்ளி, 22 மார்ச், 2024

தினசரி பஞ்சாங்கம் : சனிக்கிழமை - பங்குனி மாதம் 10ம் தேதி - 23.03.2024

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-38.42) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கியத்துடன் 1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

இன்று : சனிக்கிழமை     

ஸ்ரீசோபகிருது வருஷம் பங்குனி  மாதம் 10ம் நாள் (23.03.2024), உத்தராயணம், சிசிர ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2024,ச்சைத்ரம்,மார்ச் மாதம். மீன  மாதம்

 


 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.05.22 மணிக்கு (IST 06.14.58 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.07.35 மணிக்கு (IST 06.17.11 PM)

(latitude & Longitude = 12N86’74” & 80E6’99”)

சந்திரன்:  சிம்ம ராசியில் நாள் முழுவதும்

கும்ப  லக்ன இருப்பு : 02.51 நாழிகை (01.07 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.05 நாழிகை (12.02  மணிகள்)

 

       இன்றய பஞ்சாங்க நிலை :  சுமார் ஆனாலும் சில நன்மைகள் உண்டு

 

வாரம்

சனிக்கிழமை

பலவீனம்

திதி

வளர். சதூர்த்தசி

சுமார்

நக்ஷத்திரம்

  பூரம்

வெகு சுமார்

யோகம்

சூலம் /கண்ட

பரவாயில்லை

கரணம்

 தைத்துலம் / கரசை / வணிசை

பரவாயில்லை

நேத்ரம் (கண்)

சூரியன் நின்ற நக்ஷத்திரத்தில் இருந்து இன்றய நக்ஷத்திரம் வரை எண்ணி கண்டதை கொண்டு இன்றைய நிலை

2 மிக நன்று

ஜீவன் (உயிர்)

1 நன்று

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம்,

ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்.

 

 

 ராகு,புதன்,லக்னம்,சூரியன்,மாந்தி,குளிகன்

 குரு

காலா

பரிவேஷா,ம்ருத்யூ

சனி,சுக்ரன்,உபகேது,செவ்வாய்

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தூமா,அர்த்தப்ரஹரணா

இந்திரச்சப்பா

சந்திரன்,யமகண்டகா

வ்யதீபாதா

 

 

  கேது

 

 





சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,

இந்திரச்சாப்பா உபகேது, செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்.

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  சனிக்கு  2ல் இருக்கும் ராகு,புதன்,சூரியன்,மாந்தி,குளிகன், 4ல் இருக்கும் காலா, 11ல்  இருக்கும் வியதிபாதா  இவர்கள் சனியின் செயலில் குறுக்கீடு செய்து சில தடுமாற்றத்தை ஏற்படுத்தும், சுமாரான பலன் உண்டு, அதேபோல 12ல் இருக்கும் இந்திரச்சப்பா  3ல் இருக்கும் குரு, இவை செயலை தடுக்கும் இப்படி ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்,  புதன் – பூமி கிரஹம், குரு- ஆகாசம், சனி – காற்று, சந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 06.05 மணிக்கு

 

கிரஹம்

பாகை

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

இன்றய நிலை

லக்னம்

09:52:01

மீனம்

கன்னி

உத்திரட்டாதி

2

சம நிலை

சூரியன்

09:49:36

மீனம்

கன்னி

உத்திரட்டாதி

2

நட்பு

சந்திரன்

15:20:55

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

சம நிலை

செவ்வாய்

06:58:53

கும்பம்

தனூர்

சதயம்

1

பகை

புதன்

28:13:07

மீனம்

மீனம்

ரேவதி

4

நட்பு

குரு

22:25:16

மேஷம்

துலாம்

பரணி

3

 நட்பு

சுக்ரன்

20:42:47

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

நட்பு

சனி

19:30:54

கும்பம்

மீனம்

சதயம்

4

ஆட்சி

ராகு -வக்ரம்

22:33:43

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

கேது - வக்ரம்

22:33:43

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

மாந்தி

23:29:41

மீனம்

கும்பம்

ரேவதி

3

சம நிலை

குளிகன்

09:49:42

மீனம்

கன்னி

உத்திரட்டாதி

2

சம நிலை

தூமா

23:09:36

கடகம்

மகரம்

ஆயியம்

2

நட்பு

வ்யதீபாதா

06:50:24

தனூர்

மிதுனம்

மூலம்

3

நட்பு

பரிவேஷா

06:50:24

மிதுனம்

தனூர்

திருவாதிரை

1

சம நிலை

இந்திரச்சப்பா

23:09:36

மகரம்

கடகம்

திருவோணம்

4

சம நிலை

உபகேது

09:49:36

கும்பம்

தனூர்

சதயம்

1

சம நிலை

காலா

13:07:52

ரிஷபம்

மேஷம்

ரோஹிணி

1

சம நிலை

ம்ருத்யூ

25:13:58

மிதுனம்

ரிஷபம்

புனர்பூசம்

2

சம நிலை

அர்தப்ரஹரணா

15:49:25

கடகம்

விருச்சிகம்

பூசம்

4

பகை

யமகண்டகா

07:06:12

சிம்மம்

மிதுனம்

மகம்

3

சம நிலை

 

 

     வாரம் (இன்றய நாள்) :

கிழமை : சனி : கிழமை அதிபதி சனி சுமாரான பலம், எதிர்ப்புகள், சண்டை அதிகம், செவ்வாய், சந்திரன், கேது, ம்ருத்யூ போன்ற கிரஹங்கள் இடையூறு செய்யும், தற்போது சனி தசை அல்லது சனி புக்தி நடப்பவர்கள் மிகுந்த கவனம் தேவை, லக்னத்துக்கு 6,8,12ல் கோச்சாரத்தில் சனி இருந்தாலும் கொஞ்சம் கவனம், யோசித்து செயல்படுவது நல்லது, அரசருக்கு துன்பம் ஆட்சி பறிபோக கூடிய வாய்ப்புண்டு மஹாராஜருக்கும் சங்கடங்கள் இருக்கும் ஆனாலும் கேது நன்மை செய்யும். ஜனங்கள் சில கஷ்டங்களை அனுபவிக்க நேரும். எண்ணை பொருட்கள், கருப்பு வஸ்துகள் விலையேற்றம் இருக்கும்.

 

திதி : வளர்பிறை திரையோதசி  (02.55 நாழிகை) (அதிபதி குரு) காலை 07.09 மணி வரை, பின் சதூர்த்தசி (அதிபதி சுக்ரன்)

திதி அதிபதி சுக்ரன் வெகு சுமார் கலைத்துறையில் இருப்போர்கள் உடல் நலத்தில் அக்கறை தேவை, வங்கி பண பரிவர்த்தனை, ஷேர்மார்கெட், குடும்பத்தில் பண விஷயமான செயல்கள் ஆடை ஆபரணம் வாங்கும்போது  இங்கெல்லாம் மிகுந்த கவனம் தேவை  பண இழப்பு உண்டு

இன்றைய ஸ்ரார்த்த திதி : வளர்பிறை சதூர்த்தசி திதி (வாக்கியப்படி)

 

நக்ஷத்திரம் :  பூரம் (57.30 நாழிகை)  அதிகாலை 05.05 மணி வரை (அதிபதி சுக்ரன்) பின் உத்திரம் (அதிபதி சூரியன்)

உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27 வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம் எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், உங்கள் நக்ஷத்திரத்துக்கு 2,8,9 ஆக இருந்தால் துணிந்து செயல்படலாம்,இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம்

உங்கள் நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்

இன்று சந்திராஷ்டமம் :  திருவோணம் அதிகாலை 05.05 மணி வரை பின் அவிட்டம்   

 

யோகம்: சூலம் (22.38  நாழிகை) பிற்பகல் 03.08  மணி வரை (அதிபதி குரு), பின் கண்ட யோகம் (அதிபதி சனி)

(யோக அதிபதிகளில் குரு ஓரளவுக்கு நன்மை செய்வார், சனி பிற்பகலுக்கு மேல் பயணத்தில் கவனம், வாக்குவாதம் தவிர்க்கவும்,வழக்கு, அரசு தொடர்பு விஷயங்களை ஒத்திவைப்பது நலம் தரும், கீழ் நிலையில் இருப்போரிடம் அலட்சியம் வேண்டாம்

 

கரணம் : தைத்துலம்  (02.55 நாழிகை) காலை 07.09 மணி வரை (அதிபதி புதன்), பின் கரசை (அதிபதி குரு) கரணம் (33.15 நாழிகை) இரவு 08.27 மணி வரை, பின் வணிசை கரணம் (அதிபதி சுக்ரன்)

கரண அதிபதிகளில் குருமட்டும் ஓரளவு நன்மை தருவார். கடும் முயற்சிக்கு பின் வெற்றி உண்டு நிச்சயம், நிதானம் பொறுமை, வாக்குவாதம் தவிர்ப்பது, பண விஷயத்தில் கவனம்

 

அம்ருதாதி யோகம் :  சித்த  யோகம் நாள் முழுவதும்  

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

ராகு காலம் : காலை 09.06 மணி முதல் பகல் 10.36 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 01.37 மணி முதல் பிற்பகல் 03.07 மணி வரை

குளிகை : காலை 06.05 மனி முதல் காலை 07.36 மணி வரை

நல்ல முகூர்த்தம் :  அதிகாலை 04.45 மணி முதல், காலை 06.00 மணி வரை, மாலை 05.25 மணி முதல் மாலை 06.30 மணி வரை

கெடுதல் நேரம் : காலை 06.05 மணி முதல் காலை 07.42 மணி வரை

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)  பிற்பகல் 11.02 மணி முதல் பிற்பகல் 12.50 மணி வரை, அதிகாலை 05.33 மணி முதல் காலை (ஞாயிறு) 07.21 மணி வரை

 

மேலே சிவப்புகலரில் கொடுக்கப்பட்ட நேரத்தில் புதிய விஷயங்களை தொடங்க வேண்டாம், இந்த நேரத்தில் பயணத்தில் கவனம் தேவை, வாக்குவாதங்கள் வேண்டாம்

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சூரிய உதய மகர லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும் சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது.  உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும், இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.

 

விவரம்

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

புதன்

குரு

சுக்ரன்

சனி

ஷட்பலம்

413.81

309.75

378.40

454.81

459.75

382.11

427.32

ரூபம்

6.90

5.16

6.31

7.58

7.66

6.37

7.12

இஷ்டபலம்

39.31

36.63

27.53

12.17

23.89

22.69

10.74

கஷ்டபலம்

17.10

16.68

11.82

38.31

32.65

24.41

46.50

தசை/புத்தி

மிக நன்று

 நன்று

 நன்று

பலவீனம்

சுமார்

சுமார்

பலவீனம்

 

உங்களது நடப்பு தசை புக்தி என்ன வென்று பார்க்கவும் அந்த கிரஹம் மேலே கொடுக்கப்பட்ட நன்று, பலவீனம், சுமார் என அறிந்து கொண்டால் இன்றய செயல்பாடுகள் பலன் தருமா தராதா என புரிந்துவிடும். ராகு சனியை போல கேது செவ்வாயை போல எடுத்து கொள்ளவும். ஜனன ஜாதகத்தில் இவை நன்றாக இருந்தால் கெடுதல் ஓரளவு குறையும்.

                

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 06.05 மணிக்கு

 

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

06.05-07.05

செவ்வாய்

 

06.05-07.05

புதன்

07.05-08.05

சூரியன்

இரவு

07.05-08.05

சந்திரன்

08.05-09.05

சுக்ரன்

 

08.05-09.04

சனி

09.05-10.05

புதன்

 

09.04-10.04

குரு

10.05-11.05

சந்திரன்

 

10.04-11.04

செவ்வாய்

11.05-12.05

சனி

 

11.04-12.04

சூரியன்

12.05-01.05

குரு

நடு இரவு

12.04-01.04

சுக்ரன்

பிற்பகல்

01.05-02.05

செவ்வாய்

 

01.04-02.04

புதன்

02.05-03.05

சூரியன்

 

02.04-03.04

சந்திரன்

03.05-04.05

சுக்ரன்

 

03.04-04.04

சனி

மாலை

04.05-05.05

புதன்

அதிகாலை

04.04-05.04

குரு

05.05-06.05

சந்திரன்

 

05.04-06.04

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது மகர லக்னம். காலை 05.33 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

மீனம்

05.33

07.12

 

கன்னி

05.25

07.26

மேஷம்

07.12

08.59

 

துலாம்

07.26

09.32

ரிஷபம்

08.59

11.01

 

விருச்சிகம்

09.32

11.43

மிதுனம்

11.01

01.12

 

தனூர்

11.43

01.51

கடகம்

01.12

03.22

 

மகரம்

01.51

3.44

சிம்மம்

03.22

05.25

 

கும்பம்

03.44

5.29

 

                     பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக  ராஜலக்ஷமித்தாயார்  சமேத ராஜநாராயணப்பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...