வெள்ளி, 30 ஜூன், 2023

பஞ்சாங்கம் ஏன் பார்க்க வேண்டும் பலன் என்ன

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

இரவு மகளிடம் கேட்டேன் இந்த பஞ்சாங்கம் போடும்போது பலவிஷயங்களை போட்டு அதை நேரடியாக கொடுக்க முடியவில்லை, பிடிஎஃப் எக்ஸல் ஃபேஸ்புக்கில் அக்ஸப்ட் ஆகலை ஃபோட்டோ காப்பியா போட்டால் அடியேனை போல வயதானவர்களுக்கு சூம் செய்வதால் தெளிவாக தெரியவில்லை  என்ன வழி என்றேன்.

ப்ளாக் ஆரம்பித்து அதில் எழுதி இங்கு அந்த லிங்கை ஷேர் பண்ணு என்றாள் இன்று செய்திருக்கிறேன். அன்பர்கள் சொல்லனும் எப்படி இருக்கு என 

இதற்கு மேல் பெண்ணுடன் ஒரு விவாதம் இதை பற்றி ....


ஏன் இப்படி கஷ்டப்பட்டு 2-3 மணி நேரம் செலவு பண்ணி ஒரு பஞ்சாங்கம் போடனும் மொத்தமா வருஷ பஞ்சாங்கம்னு போடலாம் இல்லையா என்றாள்

வருஷ பஞ்சாங்கம் நிறைய இருக்கு 28நி பாம்பு பஞ்சாங்கம், கருட பஞ்சாங்கம், ஆர்க்காடு பஞ்சாங்கம் திருநெல்வேலி பஞ்சாங்கம் காஞ்சி மடம் , வாசன் திருக்கணிதம் இப்படி பல 

நம் நாட்டில் இந்துக்களில் 90% பேர் வீட்டில் இதில் ஒரு பஞ்சாங்கம் கண்டிப்பாக இருக்கும். எத்தனை பேர் அதை தினம் படிக்கிறார்கள் அதில் என்ன போட்டுருக்கு எதற்காக அதன் பயன் என்ன எத்தனை பேருக்கு தெரியும்.

உன் பாட்டிக்கு எழுத படிக்க தெரியாது ஆனா தெக்க சூலம் வடக்க சூலம் பயணம் கூடாதுன்னு சொல்றா எப்படி,  விவசாயி இப்ப பயிரிடனும்னு எப்படி அறிந்து கொள்கிறார். அந்தகாலத்தில் கோயிலில் தினசரி பஞ்சாங்கம் படிப்பர் விஷயங்கள் சொல்வர். (இன்றும் இருக்கு ஆனா சம்ப்ரதாயம்) அதை அறிந்து மக்கள் செயல்படுவர்.

சரம் பார்ப்பவனுடன் சரசமாடாதே, பக்ஷி பார்ப்பவனிடம் பகைக்காதே பஞ்சாங்கம் பார்ப்பவனுடன் மோதாதே என்பர் காரணம் அந்த நேரத்தில் அவர்கள் அமைதியாக இருந்து சமயம் பார்த்து அடிப்பர்.

அடியேன் நோக்கம். தினம் எழுதுவதன் காரணம் இது தான்.

பொருத்தம் பார்க்கறது, பலன் பார்க்கறது, கிரஹப்ரவேசம் திருமணம் போன்றவற்றுக்கு முகூர்த்தம் குறிப்பது இவற்றுக்கு ஜோதிடரை அனுகலாம்


அன்றாட விஷயங்களுக்கு இந்த பஞ்சாங்கத்தை பார்த்து நல்ல நேரத்தை அறியலாம்.


உதாரணமாக வண்டி வாங்க ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணனும். வண்டிக்கு சுக்ரன்  அன்று அவர் நன்றாக இருக்கிறாரா அந்த ஹோரையில் ரிஜிஸ்டர் பண்ணலாமா வேறு ஹோரை தாரா பலன் (நக்ஷத்திர பலன், குறிப்பிட்ட நேரத்தில் லக்னம் என்ன அங்கிருந்து சுக்ரன் இருக்கும் இடம் சாதகமா) என்றெல்லாம் பார்த்து நடந்தால் நன்மை உண்டாகும் வருங்காலங்களில் இதை எப்படி பார்க்கிறது என சொல்லி கொடுக்கலாம் என இருக்கிறேன்

அவசரமாக பணம் தேவை கடன்தான் வாங்கி ஆகவேண்டும் என நிலை, கேட்க போகும் நேரத்தில் சனி ஹோரை அல்லது சனி வலுவாக இருந்துவிட கூடாது பஞ்சாங்கத்தில் சனி ஹோரை எப்ப என தெரிந்தால் அதை தவிர்க்க இயலும். ஒருவேளை அந்த ஹோரையில் தான் வாங்கனும் எனில் அன்றைய நாளின் கிரஹ பலம், புறப்படும் நேரத்தில் உதயமான லக்னம், அதிலிருந்து 6க்குடையவர் பலம் இப்படி பார்த்து வாங்கினால் திருப்பி கொடுப்பது சுலமாக இருக்கும்.

உங்கள் பிறந்த நக்ஷத்திரத்திலிருந்து இன்றைய நக்ஷத்திரம் பகையா நட்பா எப்படி என்பதை தாராபலம் என்ற பக்கத்தில் கொடுத்திருக்கிறோம்.

கொஞ்சம் கொஞ்சமாக இதை புரிந்து கொண்டால் மிக எளிதாக நம் தேவைகளுக்கான நல்ல நேரத்தை பயன்படுத்தலாம் என்பது அடியேன் அபிப்ராயம்.


ந்ருஸிம்ஹன் திருவுளம்











2 கருத்துகள்:

  1. பஞ்சாதகத்தை, தினம் எப்படி பார்ப்பது, படிப்பது பின்பு அதை எப்படி பயன்படுத்ததுவது என்று தெரிந்துக் கொள்ள ஆசை. கட்டணம் கொடுத்து படிக்கவும் விருப்பம். இதை ஒரு பாடமாகவே வைக்க வேண்டும் மேல்நிலை பள்ளி அளவில்.

    பதிலளிநீக்கு
  2. // வருங்காலங்களில் இதை எப்படி பார்க்கிறது என சொல்லி கொடுக்கலாம் என இருக்கிறேன் // முதல் மாணவன் தயார் (சக்திவேல் தாயப்பன்). ஆசிரியர் சரி என்றால் வகுப்பு பற்றிய மேலதிக தகவல்கள் பெற ஆசை.

    பதிலளிநீக்கு

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...