சனி, 3 ஆகஸ்ட், 2024

தினசரி பஞ்சாங்கம் : ஞாயிற்றுக்கிழமை - ஆடி மாதம் 19ம் தேதி - 04.08.2024 - ஸர்வ அமாவாசை

                                                 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

 தினசரி பஞ்சாங்கம் – ஞாயிற்றுக்கிழமை – ஆடி ஸர்வ அமாவாசை

 

திருநெல்வேலியின் தீர்க்கரேகை & அட்ச ரேகைக்கு & லோகல்  டைமுக்கு புஷ்யபக்ஷ அயனாம்ஸம் (23-03-56:91) கணக்குப்படி கணிக்கப்பட்டது(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 19.12 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.10.48) (குறிப்பு இந்த பஞ்சாங்கம் கிட்டத்தட்ட வாக்கிய பஞ்சாங்கப்படி  1டிகிரி வித்யாச அளவில் ஒத்துப்போகும்)

 

 

தமிழ் வருடம் : ஸ்ரீ க்ரோதி (வரிசைப்படி 38ம் வருடம்)

 

தமிழ் மாதம் : ஆடிதமிழ் தேதி : 19

 

தினம் : ஞாயிறு

 

கலி வருஷம் : 5125, சாலிவாகனம் : 1946, பசலி : 1434,கொல்லம் : 1198,

 

ஆங்கிலம் : 2024 ஆங்கில மாதம் : ஆகஸ்ட்  தேதி : 04

 

அயனம் : தக்ஷிணாயணம்

 

ருது : க்ரீஷ்ம

 

சூரியோதயம் : காலை 05:55:17  / சூரிய அஸ்தமனம் : மாலை 06:16:51

 

சந்திர உதயம் : காலை 06.23 /  சந்திர அஸ்தமனம் :  மாலை 06:20

 

தினமானம்  (பகல் பொழுது) : 12:22 மணி (நாழிகையில் : 30:55)

 

கடக லக்னம் இருப்பு : 01:52 நாழிகை (00:45:12 மணி)

 

சந்திரன்  கடக ராசியில் நாள்முழுவதும்    

 

அம்ருதாதி யோகம் : சித்த யோகம் நாள்முழுவதும்

 

ப்ரஹ்ம முகூர்த்தம் –  இல்லை

 

அபிஜித் முகூர்த்தம் – இல்லை

 

கோதுளி முகூர்த்தம் :  மாலை 05.55 – மாலை 06.55

 

சுப ஹோரை : புதன்,சூரியன், குரு,சனி  –  முழுப்பலன்

 

 

இன்றய பஞ்சாங்க நிலை :   வெகு சுமார்

 

வாரம் (தினம்) : ஞாயிற்றுக்கிழமை

 

அதிபதி சூரியன் பலமாக இருந்தாலும் சனி,ராகு தோஷத்தை செய்கிறது. முக்கியமாக தந்தையின் ஆரோக்கியம், உயர் பதவியில் இருப்போர் ஆரோக்கியம், அரசாங்கத்துக்கு கெடுதல் கோயில், புனித இடங்களுக்கு கெடுதல் என இருக்க வாய்ப்பு, யோசித்து செயல்படுவது நலம் தரும்.

 

 

திதி : (தேய்பிறை) 

 

அமாவாசை திதி  மாலை 04.24 மணி வரை (அதிபதி ராகு)  - நன்று

 

பிறகு பிரதமை திதி (அதிபதி சூரியன்) மறுநாள் சூரியோதயம் வரை-  நன்று

 

இன்றய ஸ்ரார்த்த திதி : அமாவாசை (வாக்கிய பஞ்சாங்கப்படி)

 

இன்றய நக்ஷத்திரம் :

 

பூசம் நக்ஷத்திரம் பகல் 10.55 மணி வரை (அதிபதி சனி), பிறகு ஆயில்யம் (அதிபதி புதன்)  மறுநாள் சூரியோதயம் வரை.

 

இன்றய சந்திராஷ்டமம் : மூலம் பகல் 10.55 மணி வரை, பின் பூராடம் நக்ஷத்திரம்

 

உங்களின் பிறந்த நக்ஷத்திரத்துக்கு 17வது நக்ஷத்திர தினம் சந்திராஷ்டமம்

 

தாராபலம் இல்லாத நக்ஷத்திரங்கள் : உங்களின் ஜென்ம நக்ஷத்திரத்தில் இருந்து எண்ணவரும் இன்றய நக்ஷத்திரமானது,  01,03,05,07 வது நக்ஷத்திரங்கள் ஆக இருந்தால் கெடுதல் தரும் (9க்கு மேற்படின் 9ஆல் வகுக்க வரும் மீதி) மிக கவனமாக இருந்தல் அவசியம்

 

 1வது ஜென்ம தாரை : இது பிறந்த நக்ஷத்திரம் – கவலை, குழப்பம் எந்த தொழிலும் மந்தமாகுதல் அல்லது நட்டத்தை தருதல் ஆகும்

 

3வது விபத்து தாரை : தவிர்க்க வேண்டிய நாள் இதில் பயணம் செய்வதை முக்கியமாக தவிர்க்க வேண்டும்

 

5வது பிரத்யக் தாரை : மிகுந்த மன உளைச்சல் வீண் அலைச்சல், மறதி, சண்டை உண்டாக்கும்

 

7வது வதை தாரை : கடுமையான தீவினையை தரும், வாக்குவாதம் வீண் வம்பு தருவது

 

இன்றய நக்ஷத்திரம் மேற்படி 1,3,5,7 ஆக இல்லாதிருந்தால் அது சுபம் கொடுக்கும் நாளாகும்


யோகம் :

 

சித்தி யோகம் காலை 06.15 மணி வரை (அதிபதி செவ்வாய் ) –  சுமார்

 

பிறகு வ்யதீபாத யோகம் (அதிபதி ராகு) மறுநாள் சூரியோதயம் வரை -  நன்று

 

கரணம் :

 

நாகவ கரணம் மாலை 04.24 மணி வரை (அதிபதி சனி) – நன்று

 

பிறகு கிம்ஸ்துக்ன கரணம் (அதிபதி குரு) – அதிகாலை 05.01 மணி வரை – நன்று

 

பிறகு பவ கரணம் (அதிபதி சூரியன்) – மறுநாள் சூரியோதயம் வரை –  நன்று

 

 

இன்றய கசர யோகம் :  கசரம் பகல் 10.55 மணி வரை உண்டு அதன் பின் சுபம் நன்று

 

கசரம் எனப்படுவது சுப செயல்களுக்கு பார்க்கப்படுவது. சூரியன் நின்ற  நக்ஷத்தில் இருந்து முகூர்த்தம் குறிக்கப்படும் நாளில் சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணியதில் 3-4-5-9 வந்தால் (9க்கு மேற்படின் ஒன்பதால் வகுக்க மீதம் வருவது) – கசரம் யோகம் இதில் சுப செயல்கள் பண்ணக்கூடாது , மற்ற 1-2-6-7-8 ஆக வந்தால் கசரம் யோகம் இல்லை இது நல்ல முகூர்த்தம் எந்த ஒரு செயலுக்கும் ஏற்றது.

 

 

 

இன்றய நாளின் தன்மை : நன்றாக இல்லை

 

நேத்ரம் (கண்)

0 – கண்

ஜீவன் (உயிர்)

0 – ஜீவன்

 

விவரம் கீழே தரப்பட்டு உள்ளது

 

நேத்திரம் எனில் கண் . இரண்டு கண்ணும் இருந்தால் தான் நன்மை, சூரியன் நின்ற நக்ஷத்திரம் கிரஹ சாரத்தில்

கொடுக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து இன்றய சந்திரன் நின்ற நக்ஷத்திரம் வரை எண்ணிக்கண்டது 1,2,3,4,25,26,27 நக்ஷத்திரம் வந்தால் கண் இல்லாத குருட்டு தினம் அது 0, அதுபோல 5,6,7,8 ஆக இருந்தால் அது ஒருகண் உள்ள தினம் இது 1 மத்திமம், பாக்கி 2கண் உள்ள நக்ஷத்திரம் 9,10,11,12,13,14,15,16,18,19,20, 21,22,23,24 ஆகும் இது முழுப்பலம், ஜீவன் எனில் உயிர்,1,2,10,19,27 உயிரற்ற நக்ஷத்திரம், 0 ஜீவன், 3,4,5,6,7,8,9,20 முதல், 27 வரை வந்தால் அரை ஜீவன் ½ மத்திமம் , பாக்கி 11 முதல் 18 வரை முழு ஜீவன் இவை சுபம்

 

நம்முடைய எந்த ஒரு செயலுக்கும், முகூர்த்தம் குறிக்கும் போது இதை மனதில் கொண்டால் நன்மை அதிகம் இருக்கும்

 

இன்றய நாள் : கீழ்நிலை ஊழியர்கள், சாதாரண குடிமக்களுக்கு நன்மை உண்டாகும், புதிய முயற்சிகளை ஒத்திவைப்பது நலம் தரும், அரசாங்கத்தோடு ஒத்துப்போவது நன்மை உண்டாகும். (தங்களின் நக்ஷத்திர தாரா பலம், இன்றய கிரஹ ஷட்பலம் இவற்றை கணக்கில் கொண்டு பார்க்கவும்)

 

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்துசுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

ராகு காலம் : மாலை 04.44  – மாலை 06.17

 

எமகண்டம் : பிற்பகல் 12.06  – பிற்பகல் 01.39

 

குளிகை : பிற்பகல் 03.11  –  மாலை 04.24

 

வர்ஜா (நக்ஷத்திர த்யாஜ்யம்) : நள்ளிரவு 12.44  – நள்ளிரவு 02.28

 

மோசமான நேரம் : மாலை 04.38 – மாலை 05.27   

 

 

இன்றய லக்னம் விவரம் மணியில்


லக்னம்

மணி முதல்

மணி வரை

கடகம்

04.33

06.40

சிம்மம்

06.40

08.40

கன்னி

08.40

10.37

துலாம்

10.37

12.39

விருச்சிகம்

12.39

02.49

தனூசு

02.49

04.57

மகரம்

04.57

06.53

கும்பம்

06.53

08.42

மீனம்

08.42

10.23

மேஷம்

10.23

12.16

ரிஷபம்

12.16

02.19

மிதுனம்

02.19

04.29

 

சிவப்பு கலர் இட்ட லக்னம் பலன் தராது

 

காவி வண்ணமும் சுப பலன் இல்லை       பச்சை வண்ணம் நன்மை தரும்

 

 

இன்றய கிரஹ ஷட் பலம் : (சூரிய உதய நிலையில் இருந்து அதிக பக்ஷம் 5.25 வரை முன் பின் இருக்கும் – இன்றய நாள் முழுவதும் ) இன்றய சூரியோதயம் 05.55.17 மணிக்கு பலம் நிலைகள்

 

கிரஹம்

ஷட் பலம்

ரூபம்

இஷ்ட பலம்

கஷ்ட பலம்

உங்கள் நடப்பு தசா / புக்தி பலன் தருமா, அல்லது பலன் இல்லையா

சூரியன்

564.85

9.41

35.21

21.53

நல்ல பலன்

சந்திரன்

479.49

7.99

7.80

37.87

பலன் இல்லை

செவ்வாய்

405.54

6.76

27.16

32.41

சுமார் பலன்

புதன்

553.22

9.22

50.42

9.38

மிக நல்ல பலன்

குரு

407.86

6.80

31.18

23.58

நல்ல பலன்

சுக்ரன்

347.36

5.79

13.92

45.69

பலன் இல்லை

சனி

378.44

6.31

29.57

22.38

நல்ல பலன்

 

(ராகு, கேதுவுக்கு தனியாக பலம் கிடையாது ராகு சனியை போலும், கேது செவ்வாயை போலும் செயல்படும் அதை பொருத்து பலம்)

 

இஷ்டபலம் / கஷ்டபலம்  விளக்கம்ஷட்பலம் எனப்படும் 6 விதமான கிரஹ பலம் உங்களது பிறப்பு ஜாதகத்தில் கிரஹத்தின் இஷ்டபலம் அதிகம் இருந்து, கஷ்டபலம் குறைவாக இருந்தால்  அந்த கிரஹத்தின் தசா அல்லது புக்தி காலத்தில் நன்மை அதிகம் இருக்கும். இஷ்டபலம் குறைந்தால் தீமை அதிகம், பிறப்பு ஜாதகத்தில் நடப்பு க்ரஹத்தின் தசை அல்லது புக்தி இவற்றின் இஷ்டபலம் நன்றாக  இருந்து இன்றைய நாளில் அதே கிரஹத்தின் கஷ்டபலம் அதிகம் எனில் கொஞ்சம் சுமாரான செயல்பாடுகள் & கெடுதலுக்கும் வாய்ப்பு, மாறாக இரண்டு இஷ்டபலமும் நன்றாக அல்லது சமமமாக இருந்தால் நன்மை.  இரண்டு கஷ்டபலமும் அதிகம் இருந்தால் இன்றய நாளில் கெடுதல் வர வாய்ப்பு கவனமாக இருக்க வேண்டும்.

 

 

ராகு

 

செவ்வாய்,குரு

உபகேது,இந்திரச்சப்பா

(சனி)

சூரிய உதயத்தின் போது இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள், பாகை,நட்பு நிலைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

லக்னம்,சூரியன்,வ்யதீபாத,சந்திரன்

பரிவேஷா

புதன்,சுக்ரன்,காலா

தூமா,மாந்தி,குளிகன்

யமகண்டகா

அர்த்தப்ரஹரணா

கேது,ம்ருத்யூ

 

  

 

 

 

மேலே கொடுக்கப்பட்ட  கட்டத்தில்  சிவப்பு வண்ணமிட்ட  ராசி (பலன் தராத  ராசி) நெருப்பில் புகைந்துவிடுவது, உங்களது ஜனன ஜாதகத்தில் தக்த ராசிகள், அதில் இருக்கும் கிரஹங்கள் இன்று சுப பலன் தராது. காவி வண்ணம் மிக சுமாரான பலன் தரும்

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.கீழே கிரஹ சஞ்சார நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு உங்கள் ஜாதகத்திலும் நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார்உங்கள் ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம் தேவை

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா, வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது,

செவ்வாய் - ம்ருத்யூ, புதன் - அர்த்தப்ரகரண, குரு - யமகண்டா, சனி -  குளிகை, மாந்தி

 

உபகிரஹங்கள் எப்போதும் எதிர்வினை மட்டுமே தரும்

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது காலை 05:55:17 மணிக்கு

 

கிரஹம்

தீர்க்க ரேகை

ராசி

நவாம்ஸம்

நக்ஷத்திரம்

பாத

இன்றய நிலை

லக்னம்

18:05:46

கடகம்

தனுசு

ஆயில்யம்

1

நட்பு

சூரியன்

19:05:21

கடகம்

தனுசு

ஆயில்யம்

1

நட்பு

சந்திரன்

14:03:27

கடகம்

விருச்சிகம்

பூசம்

4

ஆட்சி

செவ்வாய்

16:36:15

ரிஷபம்

ரிஷபம்

ரோஹிணி

2

நட்பு

புதன்

10:58:48

சிம்மம்

கடகம்

மகம்

4

நட்பு

குரு

21:52:28

ரிஷபம்

கடகம்

ரோஹிணி

4

சமம்

சுக்ரன்

05:38:02

சிம்மம்

ரிஷபம்

மகம்

2

சமம்

சனி -வக்ரம்

25:22:24

கும்பம்

ரிஷபம்

பூரட்டாதி

2

ஆட்சி

ராகு -வக்ரம்

15:00:33

மீனம்

கும்பம்

உத்திரட்டாதி

4

நட்பு

கேது - வக்ரம்

15:00:33

கன்னி

ரிஷபம்

ஹஸ்தம்

2

நட்பு

மாந்தி

15:21:27

தனுசு

சிம்மம்

பூராடம்

1

சமம்

குளிகன்

04:39:09

தனுசு

ரிஷபம்

மூலம்

2

சமம்

தூமா

02:25:21

தனுசு

மேஷம்

மூலம்

1

நட்பு

வ்யதீபாதா – வக்ரம்

27:34:39

கடகம்

மீனம்

ஆயில்யம்

4

சமம்

பரிவேஷா - வக்ரம்

27:34:39

மகரம்

கன்னி

அவிட்டம்

2

சமம்

இந்திரச்சப்பா

02:25:21

மிதுனம்

துலாம்

மிருகசீரிடம்

3

நட்பு

உபகேது

19:05:21

மிதுனம்

மீனம்

திருவாதிரை

4

பகை

காலா

00:16:34

சிம்மம்

மேஷம்

மகம்

1

நட்பு

ம்ருத்யூ

17:08:07

கன்னி

மிதுனம்

ஹஸ்தம்

3

நட்பு

அர்தப்ரஹரணா

10:25:07

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

நட்பு

யமகண்டகா

02:40:15

விருச்சிகம்

கடகம்

விசாகம்

4

நட்பு

 

 

 

 

குறிப்பு :

அர்கலா (intervention)- குறுக்கீடு.  ஒரு கிரஹத்துக்கு 2,4,11ம் இடங்கள் அதில் இருக்கும் கிரஹங்கள் இந்த கிரஹத்தின் செயல்பாடுகளில் தலையீடு செய்யும் இதை பொருத்து நன்மை தீமை அமையும்

 

விரோத அர்கலா (obstruction) தடைகள். ஒரு கிரஹம் இருக்கும் இடத்துக்கு 12,9,10,3ல் இருக்கும் கிரஹம் அல்லது அந்த ராசி செயலை தடை செய்யும் இது பாதகம்

 

உதாரணமாக  சூரியனுக்கு  : 02ல் இருக்கும் புதன்,சுக்ரன், 04ல் இருக்கும் அர்த்தப்ரஹரணா  இவர்கள் சூரியனின்  செயலில் குறுக்கீடு செய்வார்கள்  பலன் சுமார்

 

அதேபோல 03ல் இருக்கும் கேது,ம்ருத்யூ,  09ல் இருக்கும் ராகு, இவர்கள் சூரியனின் செயல்களில் குறுக்கீடு செய்யும், பலன் இல்லை

 

இது போல  ஒவ்வொரு கிரஹத்துக்கும் பார்க்கவேண்டும்

 

இதனால் இன்றய செயல்களில் வெற்றி உண்டா இல்லையா என்பதை அறிந்து செயல்பட உதவும்.

 

சூரியன்,செவ்வாய்,கேது – நெருப்பு கிரஹம்,  புதன் – பூமி கிரஹம்குரு- ஆகாசம்சனி – காற்றுசந்திரன் & சுக்ரன் – நீர் கிரஹம்  (இந்த தன்மை புரிந்து கொண்டால் இன்றய நாளை பயன்படுத்துவது எளிதாகும்

 

மேஷம், சிம்மம், தனூர் ராசிகள் – நெருப்பு ராசிகள்

ரிஷபம்,கன்னி,மகரம் ராசிகள் -  பூமி ராசிகள்

மிதுனம்,துலாம்,கும்பம் ராசிகள் – காற்று ராசிகள்

கடகம்,விருச்சிகம், மீனம் ராசிகள் – நீர் ராசிகள்

 

இது இயற்கையானது. உங்கள் லக்னத்தில் மேற்படி ராசிகள் எத்தனையாவதோ அதன் பலம் பலவீனம் பொருத்தது இன்றய நாள் அமையும்.

               

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05:55:17 மணிக்கு

 

ஹோரை

போது

மணி முதல் மணி வரை

ஹோரை

போது

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

05.55-06.55

குரு

 

05.55-06.55

சுக்ரன்

06.55-07.55

செவ்வாய்

 

06.55-07.55

புதன்

07.55-08.55

சூரியன்

இரவு

07.55-08.55

சந்திரன்

08.55-09.55

சுக்ரன்

 

08.55-09.55

சனி

09.55-10.55

புதன்

 

09.55-10.55

குரு

10.55-11.55

சந்திரன்

 

10.55-11.55

செவ்வாய்

11.55-12.55

சனி

நள்ளிரவு

11.55-12.55

சூரியன்

பிற்பகல்

12.55-01.55

குரு

 

12.55-01.55

சுக்ரன்

01.55-02.55

செவ்வாய்

 

01.55-02.55

புதன்

02.55-03.55

சூரியன்

 

02.55-03.55

சந்திரன்

மாலை

03.55-04.55

சுக்ரன்

 

03.55-04.55

சனி

04.55-05.55

புதன்

அதிகாலை

04.55-05.55

 

               பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும்திருமணம்குழந்தை பாக்கியம்செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அபிஷேகவல்லித்தாயார்  சமேத க்ரோட ந்ருஸிம்ஹன்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (Lakshmi Nrusimhan)

Astrologer, Akshaya_Vedic Astro Centre

No.13, Dr.Sivanthi Athiththanar Colony, Near Labour Office, Thirunelveli

Phone & Whatsapp No.8056207965  Email Id : akshayavedicastrocentre@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...